இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கையை விடவும் இலங்கைக்கு எதிரான அறிக்கை கடுமையானது!
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குற்ற அறிக்கையை விடவும் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச் செயல் அறிக்கை மோசமானது என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக சுமத்தப்பட்ட போர்க்குற்றச் செயல் அறிக்கையை விடவும் நான்கு மடங்கு மோசமான அளவில் இலங்கைக்கு எதிரான அறிக்கை காணப்படுகின்றது.
அறிக்கையின் பிரகாரம் வன்னிப் போரை நேரில் பார்த்த 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் சாட்சியமளித்துள்ளனர்.
போர்க் குற்றச்செயல்களில் ஈடுபட்ட உலகின் வேறு எந்த நாட்டுக்கும் இவ்வாறான ஓர் அறிக்கை வெளியிடப்படவில்லை என ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன என கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சாட்சியம் வழங்கியவர்கள் உண்மை சொல்கின்றார்களா அல்லது இல்லையா என்பது பற்றி ஆராயப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நாள் தோறும் வரும் புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் போர்க்குற்றச் செயல்களை நேரில் பார்த்ததாக கூறும் நபர்களை அழைத்து வந்து சாட்சியமளிக்கச் செய்வதாக கொழும்பு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Reviewed by Author
on
August 16, 2015
Rating:
Reviewed by Author
on
August 16, 2015
Rating:

No comments:
Post a Comment