பொதுத்தேர்தலுக்கு 24 மணிநேரத்துக்கு முன்னரும் மைத்திரியின் பிரசாரப்பாணி செய்தி...
இலங்கையில் பொதுத்தேர்தலுக்கு 24 மணித்தியாலங்கள் இருக்கும் நிலையில் ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆதரவை பெற்ற ஜனாதிபதி மைத்திரிபாலவின் பிரசாரப்பாணி செய்திகள் சிங்கள வார இதழ்களில் வெளியாகியுள்ளன.
கம்பஹா மாவட்ட வேட்பாளர் ருவன் விஜயவர்த்தனவின் குடும்ப செய்தித்தாளான லங்காதீப பத்திரிகையில் இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அரசாங்க பத்திரிகையான சிலுமினவும் மைத்திரிபாலவின் பிரசாரப்பாணியிலான செய்தியை பிரசுரித்துள்ளது.
இந்தநிலையில் இந்த செயலை தேர்தல் விதிகளுக்கு புறம்பானது என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் பிரசுரிக்கவேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
எனினும் இந்த இரண்டு பத்திரிகைகளும் ஆணையாளரின் உத்தரவை மீறி கடந்த இரண்டு நாட்களில் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலுக்கு 24 மணிநேரத்துக்கு முன்னரும் மைத்திரியின் பிரசாரப்பாணி செய்தி...
Reviewed by Author
on
August 16, 2015
Rating:
Reviewed by Author
on
August 16, 2015
Rating:


No comments:
Post a Comment