மன்னார் நாவற்குளம் கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு-தடுத்து நிறுத்த கோரிக்கை Photos
மன்னார் திக்கேதீஸ்வரம் பிதான வீதி நாவற்குளம் கிராமத்தில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான வாயல் காணியில் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமான முறையில் மண்  அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பாதீக்கப்பட்ட அப்பகுதி மக்கள் வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
தென்பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த குறித்த  நபர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரச மற்றும் தனியார் காணிகளில் தொடர்ச்சியாக மண் அழல்வில் ஈடுபட்டு வருவதோடு மன்னார் மற்றும் தென் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றார்.
இவருக்கு பொலிஸாரும் சில அதிகாரிகளும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த நபர் தற்போது மன்னார் திக்கேதீஸ்வரம் பிதான வீதி நாவற்குளம் கிராமத்தில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான வாயல் காணியில் நாள் ஒன்றிற்கு பல டிப்பர் மண்களை ஏற்றி செல்வதாக அந்த மக்கள் முறையிட்டுள்ளனர்.
-உடனடியாக குறித்த நாவற்குளம் கிராமத்திற்குச் சென்ற வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோர் மண் அகழ்வை நேரடியாக பார்வையிட்டதோடு,டிப்பர் வாகனத்தின் சாரதிகளுடனும் கலந்துரையாடினார்.
-எனினும் குறித்த மண் அகழ்வில் ஈடுபடுபவர் தென் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவிரிடம் சம்பள அடிப்படையில்டிப்பர் வாகனம் ஓடுவதாகவும் தெரிவித்தார்.
-இந்த நிலையில் அவர்களிடம் இருந்த மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வாங்கி பார்த்த போது வேறு இடத்தில் மண் அகழ்விற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்து நாவற்குளம் கிராமத்தில் உள்ள குறித்த வயல் காணியில் அகழ்வு செய்யப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளதமாக வடமாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.
-எனவே மன்னார் பிரதேசச் செயலாளர்,உரிய திணைக்கள தலைவர்கள் குறிப்பாக பொலிஸார் இவ்விடையத்தில் தலையிட்டு சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வை தடுத்து றிறுத்த வேண்டும் எனவும்,குறித்த சட்ட விரோதமண் அகழ்வுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்
மன்னார் நாவற்குளம் கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு-தடுத்து நிறுத்த
கோரிக்கை Photos
 
        Reviewed by Admin
        on 
        
August 20, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by Admin
        on 
        
August 20, 2015
 
        Rating: 












No comments:
Post a Comment