மத்திய கிழக்கில் 13 மில். சிறுவர்களின் கல்வி மறுப்பு...
மத்திய கிழக்கு யுத்தங்களால் அங்கு 13 மில்லியனுக்கும் அதிகமான சிறுவ ர்களின் கல்வி மறுக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. ஐ.நாவின் சிறுவர் நிதியமான யுனிசெப் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பொன்றில், மத்திய கிழ க்கு மற்றும் வட ஆபிரிக்காவின் எதிர்கால தலைமுறையின் எதிர்பார்ப்பு சிதைந்து விட்டதாக கவலை வெளியிட்டுள்ளது.
சிரியா, ஈராக், யெமன் மற்றும் லிபி யாவில் கிட்டத்தட்ட 9000 பாடசாலைகளை கல்விக்கு பயன்படுத்த முடியாதிரு ப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பிராந்தியத்தில் பாடசாலைகள் மற் றும் ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் தரவுகளையும் யுனிசெப் ஆவணப்படுத்தியுள்ளது.
சிரியா, ஈராக், யெமன், லிபியா மற்றும் சூடான் நாடு களில் பாடசாலை பருவத்தில் இருக்கும் சுமார் 40 வீத சிறு வர்களான 13.7 மில்லியன் பேர் கல்வி பெறாமல் உள்ளனர். எனினும் அடுத்த சில மாதங் களில் இந்த எண்ணிக்கை 50 வீதத்தை எட்டும் என்று ஐ.நா. அச்சம் வெளியிட்டுள்ளது. சிரியா, ஈராக், லிபியா, பலஸ்தீனம், சூடான் மற்றும் யெமனில் 2014ம் ஆண்டு பாடசாலைகளை இலக்குவைத்து 214 தாக்கு தல்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய கிழக்கில் 13 மில். சிறுவர்களின் கல்வி மறுப்பு...
Reviewed by Author
on
September 06, 2015
Rating:
Reviewed by Author
on
September 06, 2015
Rating:


No comments:
Post a Comment