பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் மெத்தியூஸ் - மலிங்க...
பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தலைவரான அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் இருபதுக்கு 20 ஓவர் போட்டி அணித் தலைவர் லசித் மலிங்கவும் ஒப்பந்தமாகியுள்ளதாக பாகிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து எல்லா நாட்டு கிரிக்கெட் சபைகளும் 20 ஓவர் லீக் தொடரை நடத்த முன்வந்துள்ளன. அதிக அளவு வருமானம் ஈட்டப்படுவதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இந்தியாஇ மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலிய கிரிக் கெட் சபைகளையடுத்து பாகிஸ்தானும் இதில் குதித்துள்ளது.
பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகள் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடத்தப்படுகிறது.
இந்த தொடரில் லசித் மலிங்க, அஞ்சலோ மெத்தியூஸைத் தொடர்ந்து இலங்கை அணியின் அஜன்த மெண் டிஸ், திசர பெரேரா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் சுனில் நரேன், டிவைன் சுமித், சாமுவேல் ஆகியோரும் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கட்டாரில் உள்ள தோகாவில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் 24 வரை பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைசெய்து வருகிறது.
பாகிஸ்தான் சுப்பர் லீக்கை பிரபலப்படுத்த பாகிஸ் தான் அணியின் முன்னாள் தலைவர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்களாக செயற்
படும் வசிம் அக்ரம் மற்றும் ரமீஸ் ராஜா ஆகியோரை விளம்பரத் தூதர்களாக நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபைவிரும்புவதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் மெத்தியூஸ் - மலிங்க...
Reviewed by Author
on
September 07, 2015
Rating:
Reviewed by Author
on
September 07, 2015
Rating:


No comments:
Post a Comment