மன்னார் மாவட்ட வைத்தியசாலை சிற்றூழியர்களைத் தாக்கிய இருவர் கைது...
மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் கடைமையிலிருந்த சிற்றூழியர்களிடம் இரண்டு நபர்கள் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டத்துடன் சிற்றூழியர் ஒருவரை தாக்கியுள்ளார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக சிற்றூழியரை தாக்கிய இரண்டு நபர்களும் பொலிசினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து மன்னார் பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் தமது பாதுகாப்பு மற்றும் தாக்குதலுக்குள்ளான சக சிற்றூழியரிற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இச்சம்பவ இடத்திற்கு சென்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், இச்சம்பவம் தொடர்பாக மாட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈட்டுபட்ட சிற்றூழிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சிற்றூழியர்களின் பணிபகிஸ்கரிப்பால் நோயாளர்கள் பல அசௌகரியங்களிற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்தோடு மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்கள்.
இதை தொடர்ந்து சிற்றூழியரை தாக்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, வைத்தியசாலைக்கு கூடுதல் பாதுகாப்பும் வழங்குவதாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உறுதியளித்ததை அடுத்து இன்று காலை பத்து மணியளவில் சிற்றூழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாட்ட வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் மற்றும் மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நன்றியினை தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட வைத்தியசாலை சிற்றூழியர்களைத் தாக்கிய இருவர் கைது...
Reviewed by Author
on
September 13, 2015
Rating:

No comments:
Post a Comment