குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக புத்தகம் வாங்கிப் படிக்கும் படி உத்தரவு...
ஈரானிய நீதிபதி ஒருவர், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்கும்படி உத்தரவிட்டு தீர்ப்பளித்து வருகிறார்.
ஈரானின் வடகிழக்கில் இருக்கும் நகரான கோன்பாட்-இ-கவுஸில் இருக்கும் நீதிபதியான குவாசெம் நகிசதெ இத்தகைய வித்தியாசமான தீர்ப்புகளை அளித்து வருகிறார்.
குற்றவாளிகளை தண்டித்து சிறையில் அடைப்பதன் மூலம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் ஏற்படும் தீர்க்கமுடியாத உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்காகாகவே, தான் இத்தகைய தீர்ப்புகளை அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளதாக, ஈரானிய செய்திச் சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தண்டிக்கப்படும் தனி நபர்கள் ஒவ்வொருவரும் 5 புத்தகங்களை வாங்கிப்படிக்கும்படி உத்தரவிடும் நீதிபதி அவர்கள் தாம் படித்த புத்தகங்களின் சுருக்கத்தை தனித்தனியாக எழுதி தம்மிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்.
இந்த தண்டனை ஆன்மீகரீதியானதும் அறிவு ரீதியானதும் என்று கூறப்படுகிறது.
குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக புத்தகம் வாங்கிப் படிக்கும் படி உத்தரவு...
Reviewed by Author
on
September 12, 2015
Rating:

No comments:
Post a Comment