அண்மைய செய்திகள்

recent
-

2015ம் ஆண்டிற்கான தாழ்வுபாடு பிறிமியர் லீக் T20 சம்பியனானது பெரியகடை “ஸ்டார் ஈகிள்”

மன்னார் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் அனுமதியுடன் தாழ்வுபாடு சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழகம் மாவட்ட ரீதியல்
நடாத்திய மாபெரும் லீக் முறையிலான இருபதுக்கு இருபது கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது

நேற்று 2015-10-25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில்
நடைபெற்றது.

இந்த இறுதிப்போட்டியில் பேசாலை சென்.விக்டரிஸ் அணியும், சுற்றுத்தொடரில் எதுவித தோல்விகளையும் சந்திக்காத  பெரியகடை ஸ்டார் ஈகிள் அணியும் மோதியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய பெரியகடை ஸ்டார்

ஈகிள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 07 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை குவித்தனர். துடுப்பாட்டத்தில் ஸ்டார்

ஈகிள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மயூரன் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 60(32) ஓட்டங்களையும், அணித்தலைவர் அஜித் 28(13) ஓட்டங்களையும், அரவிந் 23(18) ஓட்டங்களையும், மில்டன் 22(22) ஓட்டங்களையும், நார்தீபன் 20(14)  ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர். பந்து வீச்சில் கங்காதரன் 04 ஓவர்கள் பந்து வீசி 26 ஓட்டங்களுக்கு 02  விக்கெட்டுக்களையும், ஆனஸ், ஆனந்த் மற்றும் பிரதீப் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு 173 எனும் வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்.விக்டரிஸ் அணியினர் ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்தனர். ஒருகட்டத்தில் 77 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுக்களை இழந்த சென்.விக்டரிஸ் அணியினர்  ஆனஸின் அரைச்சதத்தின் உதவியிடன் 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தமது சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.

துடுப்பாட்டத்தில் ஆனஸ் 52(22) ஓட்டங்களையும், திலீபன் 19(13) ஓட்டங்களையும், செல்வராஜ் 16(13) ஓட்டங்களைம்

பெற்றனர். பந்து வீச்சில் மயூரன் 03 ஓவர்கள் 33 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், ஜக்சன், றெக்சன், அஜித்

ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் அரவிந், மில்டன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும்

கைப்பற்றினார்கள். இதன் மூலம் பெரியகடை ஸ்டார் ஈகிள் அணியினர் 28 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2015ம்

ஆண்டிற்கான வுPடு T20 சம்பியன்ஸ் ஆனார்கள்.

இறுதிப்போட்டியில் துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் சிறப்பாக செயற்பட்ட ஸ்டார் ஈகிள் அணியின் மயூரன் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். பரிசளிப்பு நிகழ்வின்போது இரண்டாம் இடத்தினை பெற்ற சென்.விக்டரிஸ் அணிக்கு

25000ஃ- ரூபா பணப்பரிசும் பதக்கங்களும், சம்பியன் பட்டம் வென்ற பெரியகடை ஸ்டார் ஈகிள் அணிக்கு 50000ஃ- ரூபா

பணப்பரிசும் வெற்றி கேடயமும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.








2015ம் ஆண்டிற்கான தாழ்வுபாடு பிறிமியர் லீக் T20 சம்பியனானது பெரியகடை “ஸ்டார் ஈகிள்” Reviewed by NEWMANNAR on October 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.