அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச விசாரணை மூலமே ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்கும் - கனடிய அமைச்சர்...


கனடா குடிவரவு குடியுரிமை அமைச்சரான கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் லங்காசிறி க்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்குமாயின் இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 19ம் திகதி கனடாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில்  அஜெக்ஸ் பகுதியில் கொன்சர்வேடிவ் கட்சி்யில் போட்டியிடும் கிரிஸ் அலெக்ஸ்சாண்டர் மேலும் தெரிவிக்கையில்.

1. கனடாவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினருக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்?
இந்த தேர்தலில் ஒட்டு மொத்த கனடியர்களின் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவது பொருளாதாரத்தில் முன்னேற்றம் கொண்ட எதிர்காலம். கடுமையாக உழைப்பதால் மட்டுமே வளர்ச்சியை எட்ட முடியும். பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டவே கன்செர்வெடிவ் கட்சி முயற்சிகள் மேற்கொள்ளும். தொழில், சிறந்த வாழ்க்கை தரம், சிறப்பான வங்கிச் சேவை என்பன மட்டுமல்ல வரிச்சுமையை குறைப்பது போன்றவற்றில் கன்செர்வேடிவ் அரசு கவனம் செலுத்தும். கன்செர்வேடிவ் கட்சியால் மட்டுமே பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும்.

2. சி.24 மற்றும் சி.51 சட்டங்கள் குறித்து இங்கு பரவலாக இருவேறு கருத்துகள் நிலவுகின்றன, இது குறித்து மேலும் பல தகவல்களை விளக்க முடியுமா?
கனடிய குடிமக்கள் அனைவரும் ஒரே ஒரு வகுப்பை சார்ந்தவர்கள்தான். கனடாவின் குற்றவியல் குறியீடுகளை பலப்படுத்தவும், சர்வதேச அளவில் கனடாவின் இடத்தை தக்கவைத்து கொள்ளவும், தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து கனடா குடிமக்களை பாதுகாக்கும் பொருட்டும் கன்செர்வேடிவ் அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். 2014-ம் ஆண்டு மட்டும் கனடாவில் 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் கனடாவில் புதிதாய் குடியேறியுள்ளனர். கனடாவில் குடியுரிமை பெறுவதை மிகவும் எளிதாக்கியுள்ளதே இதற்கு காரணம். கடந்த லிபரல் அரசின் ஆட்சியில் கனடாவில் பிறந்தவர்களுக்கும் குடியேறியவர்களுக்கும் இடையே பாகுபாடு ஏற்படுவது போன்ற நிலை உருவானது, ஆனால் இனிமேல் அது இருக்காது. கனடிய குடிமக்களுக்கு பாதுகாப்பும், சர்வதேச அளவில் கனடா பாதுகாப்பான நாடு என்பதை உறுதி செய்யவே சி.24 மற்றும் சி.51 மசோதாக்கள்.

3. உண்மை கண்டறியும் குழுவில் அங்கமாக நீங்கள் இலங்கையின் வட பகுதிக்கு சென்றிருந்தீர்கள். அங்கு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவமும், அதன் பின்னர் நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க முடியுமா?
கடந்த 2012-ம் ஆண்டு சக உறுப்பினர் ஒருவருடன் இலங்கையின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. இந்த பயணத்தால் மூன்று முக்கியமான முடிவுக்கு வந்தோம்,
1. 2012-ம் ஆண்டிலும் இலங்கையின் முக்கிய பகுதிகளில் ராணுவத்தின் பிரசன்னம் கடுமையாக இருந்தது. முக்கியமாக வடக்கு பகுதிகளில் அதிகமாகவே காணப்பட்டது.
2. இலங்கை தமிழர்களுக்கும் மத்திய அரசுக்குமான சமரச முயற்சிகள் எதுவும் துவங்கவோ நடைபெறவோ இல்லை.
3. காணாமல் போனவர்கள் குறித்த கேள்விகளுக்கு உறுதியான எந்த பதிலும் அவர்களால் தர முடியவில்லை. மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த மோதலில் உயிரிழந்திருந்தும் அது குறித்து பொறுப்பேற்கவோ எவரும் முன்வரவில்லை. தொடர்ந்து
இலங்கை பிரச்சனை குறித்து கனடா அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். மனித உரிமைகள் ஆணையத்தால் அழுத்தமான தீர்மானத்தை கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டோம்.
இலங்கையில் சுதந்திரமான விசாரணையை மெற்கொள்ள அனைத்து விதமான ஆதரவும் கனடா தொடர்ந்து அளிக்கும். மேலும் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை வழங்கவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்.

4. கன்செர்வேடிவ் அரசை மீண்டும் தெரிவு செய்வதால், குறிப்பாக தமிழர்களின் எதிகாலம் கருத்தில் கொண்டு, இலங்கை பிரச்சனையை எப்படி எதிர்கொள்ளும்?
சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணை மட்டுமே இலங்கை பிரச்சனைக்கு உரிய தீர்வினை தரமுடியும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய பதிலை தரவேண்டும். இந்த பிரச்சனையின் உண்மைத்தன்மையை அறிந்தால் மட்டுமே இந்த கொடிய நிகழ்வை மறக்க முடியும்.

5. கனடா மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு கனடியர்கள் புதிதாய் தெரிவு செய்யவிருக்கும் கன்செர்வேடிவ் அரசு எப்படி உதவிகரமாக இருக்கும்?
வெற்றிகரமான பொருளாதாரம் வளர்ந்து வரும் தமிழ் சமூகத்திற்கு அதிக வாய்ப்பினை வழங்கும். இலங்கையின் மறுசீரமைப்புக்காக கனடா அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். கனடா மற்றும் இலங்கையின் வியாபார தொடர்புகளை பல மடங்காக மாற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


சர்வதேச விசாரணை மூலமே ஈழ மக்களுக்கான தீர்வு கிடைக்கும் - கனடிய அமைச்சர்... Reviewed by Author on October 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.