முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டவர் களுக்கான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தக் கலந்துரையாடலில் மாகாண கிராம அபிவிருத்தி மீன்பிடி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கலந்து கொள்வார். இதன்போது இரண்டாம் கட்ட வாழ்வாதார உதவிக்கு தெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை கலந்து கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்டகிராம அபிவிருத்தி அலுவலர் நா.பஞ்சலிங்கம் அறிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல்
Reviewed by NEWMANNAR
on
October 15, 2015
Rating:

No comments:
Post a Comment