வடக்கை சீரழித்தது இந்தியாவின் றோவே! பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்: அநுரகுமார...
உலக நியமங்களுக்கு ஏற்ப நடப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
உதலகம, பரணகம மற்றும் ஐக்கிய நாடுகளின் அமரிக்க யோசனை என்பவை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் பங்கேற்று அவர் உரையாற்றிய போதே மேற்காண்டவாறு அக்குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார்.
அவரின் உரையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டவை வருமாறு,
இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகளினால் தீர்வை காணமுடியாது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணரவேண்டும்.
இந்திய உளவுச்சேவையான றோவே வடக்கை சீரழித்தது என அவர் நாடாளுமன்றத்தில் ஆக்ரோசமாக பேசினார். இன்று போரின் போது காணாமல் போனவர்கள் தமது உறவுகளை தேடுவதற்கு உரிமையுள்ளதாக குறிப்பிட்டார்.
தாமும் தமது குடும்பத்தினரும் இன்னமும் 1989 கலவரத்தின்போது போது காணாமல் போன தமது சகோதரரை தேடுவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
தமது தாய், சகோதரரை தேடி சாஸ்திரக்காரர்களிடமும் சென்று வந்ததாக அநுரகுமார கூறினார்.
இலங்கை பல்லின பல்கலாசார பல மத நாடாகும். முஸ்லிம் யுவதிகள் பர்தாவும், சிங்கள சிறுமிகள் லமாசாரியும், தமிழ் யுவதிகள் பொட்டுக்களையும் வைத்திருப்பது அவர்கள் பண்பாடுகளை எடுத்துக்காட்டுகின்றன.
எனவே இதனை உணராதவரையில் இலங்கையால் ஒரு அங்குலம் கூட முன்னோக்கி நகரமுடியாது என்றும் அநுரகுமார வலியுறுத்தினார்.
இரண்டாம் இணைப்பு
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடன் நீக்குங்கள்! ஜே.வி.பி
"யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. எனவே, இந்தச் சட்டத்தை அரசு உடன் நீக்கவேண்டும்." நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதான கொரடாவுமான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"யுத்தத்தில் நாம் எதிர்பாராதது நடக்கும். ஆனால், என்ன நடந்தது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதை மூடிமறைக்க முடியாது. எவர் மூடிமறைக்க முயற்சித்தாலும் அதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். உண்மை கண்டறியப்படவேண்டும்.
இந்த உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது உண்மையைக் கண்டறிவதாக மட்டுமே இருக்கவேண்டும். தண்டிக்கும் பொறிமுறையாக இருக்கக்கூடாது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நீடிப்பிலுள்ளது. இதை நீக்க இந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. வெலிக்கடை சிறையிலுள்ள ஒரு கைதியை நான் சந்தித்தேன்.
எதற்காக நீங்கள் கைதுசெய்யப்பட்டுள்ளீர்கள் என்று கேட்டேன். புலிகளின் அடையாள அட்டையை வைத்திருந்ததற்காக கைதுசெய்யப்பட்டேன் என்று அவர் கூறினார்.
அந்த அடையாள அட்டையில் கையெழுத்திட்டிருப்பவர் யார் என்று நான் கேட்டேன். தயா மாஸ்டர் என்று அவர் கூறினார். அடையாள அட்டையில் கைச்சாத்திட்டவர் வெளியே
இருக்கிறார். அதை வைத்திருந்தவர் உள்ளே இருக்கிறார்.
தயா மாஸ்டர், கே.பி. போன்றோர்களிடம் பணம், கப்பல், வங்கிக்கணக்கு என்பன இருந்தும் அவர்கள் வெளியே இருக்கின்றனர். இவையெல்லாம் இல்லாதவர்கள் உள்ளே
இருக்கின்றனர்.
புலிகளின் ஆயுதக் கொள்வனவு தொடர்பில் பகிரங்க நீதிமன்றத்தின் ஊடாக கே.பியிடம் விசாரணை மேற்கொள்ளவேண்டும். அதுமட்டுமன்றி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும்'' - என்றார்.
வடக்கை சீரழித்தது இந்தியாவின் றோவே! பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்: அநுரகுமார...
Reviewed by Author
on
October 24, 2015
Rating:
No comments:
Post a Comment