குவாத்தமாலா நிலச்சரிவு: உயிரிழப்பு 161 ஆக அதிகரிப்பு, 300 பேரைக் காணவில்லை
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயரிழந்தோர் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 300 பேர் வரையில் காணாமற்போயுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து இதுவரை 161 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
காணாமற்போயுள்ளவர்களில் குழந்தைகள் பலர் அடங்குவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக குவாத்தமாலா அருகேயுள்ள சாண்டா கேத்தரீனா பினூலா பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சுமார் 125 வீடுகள் புதையுண்டன. சம்பவம் இடம்பெற்று 4 நாட்கள் கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குவாத்தமாலா நிலச்சரிவு: உயிரிழப்பு 161 ஆக அதிகரிப்பு, 300 பேரைக் காணவில்லை
Reviewed by NEWMANNAR
on
October 06, 2015
Rating:

No comments:
Post a Comment