அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் கைதிகள் தொடர்பில் அமைச்சர் மனோ அமைச்சரவையில் எடுத்துரைப்பு...


பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்பு காவல் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவையில் பிரஸ்தாபித்தார்.

தனது பிரஸ்தாபத்தில் அமைச்சர் மனோ கணேசன், இக்கைதிகளில் ஒரு பிரிவினர் விசாரணை கைதிகளாகவும், ஒருசிலர் வழக்கு கைதிகளாகவும், பிறிதொரு பிரிவினர் தண்டனை கைதிகளாகவும் தமது வாழ்நாளில் கணிசமான பகுதியை சிறையில் கழித்து வருவதையும், இவர்கள் இன்று கொழும்பு, கண்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம் சிறைகளில் உண்ணாவிரதம் இருப்பதையும், அவர்களில் சிலர் இதுவரைக்குள்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதையும், கடந்த  ஆட்சியில் நிலவிய நிலைமை நமது நல்லாட்சியில் நிலவுவதை நீடிக்க விடக்கூடாது எனவும் எடுத்து கூறினார்.

அமைச்சரின் கூற்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர், நீதித்துறை அமைச்சர், சிறைத்துறை அமைச்சர் ஆகியோர் சட்டமாதிபரை அழைப்பித்து ஆராய்ந்து தனக்கு அறிவிக்கவேண்டும் என  பணித்தார் என தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

இதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இது தொடர்பில் நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சிறைத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரை உள்ளடங்கிய குழு தனது தலைமையில்  சட்டமாதிபரை அழைத்து கலந்துரையாடி இப்பிரச்சினையை மேலும் நீடிக்க விடாது தீர்க்க வேண்டும் என்பதுவே தனது நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் தனது நாளைய சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும், 20 ஆம் திகதி இது தொடர்பான முதற்கூட்டத்தை  நடத்துவோம் என அமைச்சர் மனோ கணேசனிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இந்த தகவலை அரசியல் கைதிகளிடம் நேரடியாக தெரிவிப்பதற்காக அமைச்சர் மனோ கணேசன் கொழும்பு சிறைசாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.  

அரசியல் கைதிகள் தொடர்பில் அமைச்சர் மனோ அமைச்சரவையில் எடுத்துரைப்பு... Reviewed by Author on October 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.