கனடா பாராளுமன்றில் சங்கரியின் மகன் கெரி...
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) தலைவர் வீ. ஆனந்த சங்கரியின் மகனான கெரி ஆனந்தசங்கரி (43) கனேடிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
கனடா நாட்டு குடியுரிமை பெற்ற இவர், கனடாவின் லிபரல் கட்சி சார்பாக, ஸ்காபரோ ரோக் பார்க் ஆசனத்தில் போட்டியிட்டிருந்தார்.
குறித்த ஆசனத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பழைமைவாத (Conservative) கட்சியைச் சேர்ந்த ஜெரி பான்ஸை தோற்கடித்ததன் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர், உலகின் மிகப் பிரபலமான, மனித உரிமை பற்றிய வழக்கறிஞர் ஆவார். கனடா சார்பான ஐ.நாவிற்கான பிரதிநிதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா பாராளுமன்றில் சங்கரியின் மகன் கெரி...
Reviewed by Author
on
October 20, 2015
Rating:

No comments:
Post a Comment