மாவீரன் பண்டாரவன்னியனின் வீரவணக்க நாள்
வன்னியை இறுதியாக ஆண்ட மாவீரன் பண்டாரவன்னியனின் 212வது வீரவணக்க நாள் 2015ம் ஆண்டு ஐப்பசி மாதம் 31ம் திகதி.
தாய்மண் மீது அடங்காப் பற்றுக் கொண்டு இறுதிவரை போராடிய பண்டார வன்னியன்
ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்.
வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கான்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன்.
வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கவன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தேற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும்.
வன்னியில் ஒட்டிசுட்டானில் உள்ள கைச்சிலைமடு என்னும் இடத்தில் வைத்து பண்டாரவன்னியன் வெள்ளையா்களினால் தோற்கடிக்கப்பட்டான். இதன் நினைவாக கற்சிலைமடுப்பகுதியில் பண்டாரவன்னியனிற்கு நினைவுச்சினை அமைக்கப்பட்டது.
இலங்கையில், வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன், பண்டாரகவன்னியன்.
தமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்து இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன் வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைப்போல, இலங்கையில் வெள்ளையரை எதிர்த்தவன் ‘பாயும் புலி’ பண்டாரகவன்னியன். முழுப்பெயர் குலசேகர வைரமுத்து பண்டாரகவன்னியன்.
தமிழர் ஆட்சி….
யாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப்பிரதேசத்தை பண்டாரகவன்னியன் ஆண்டு வந்தான்.
வடக்கே யாழ்ப்பாணம் பரவைக்கடலையும், தெற்கே அருவிஆற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும், கிழக்கே திரிகோணமலையையும் எல்லையாகக் கொண்டது வன்னி ராஜ்ஜியம்.
பண்டாரகவன்னியனும், கண்டி தமிழ் மன்னன் விக்கிரம ராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.
டச்சுக்காரர்களை விரட்டிவிட்டு, இலங்கையில் பல இடங்களை கைப்பற்றிக்கொண்ட வெள்ளையர்கள், பண்டாரகவன்னியனிடம் கப்பம் (வரிப்பணம்) கேட்டனர்.
தமிழ்நாட்டில், வெள்ளையருக்கு வரி கொடுக்க வீரபாண்டிய கட்டபொம்மன் மறுத்தது போல், பண்டாரகவன்னியனும் கப்பம் கட்ட மறுத்தான். கப்பம் கேட்டு வந்த வெள்ளையனை விரட்டி அடித்தான்.
வெள்ளையர்கள் விடவில்லை. 1797 -ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியை பண்டார வன்னியரிடம் அனுப்பி, கிஸ்தியை வசூலித்து வருமாறு கூறினார்கள்.
வெட்டி வீழ்த்தினான்….
வெள்ளையர்கள் மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டதால், பண்டாரகவன்னியன் வெகுண்டான். எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்கார தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், வெள்ளையர்கள் கடும் கோபம் கொண்டனர். படைகளை திரட்டிக் கொண்டு, பண்டாரகவன்னியன் மீது போர் தொடுத்தனர்.
கற்பூரப்புல் என்ற இடத்தில் இருதரப்பு படைகளும் மோதின. பண்டாரவன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து, பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.
தமிழ் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது.
மீண்டும் போர்….
ஆங்கிலேயர்கள், எப்படியாவது பண்டாரகவன்னியனை தோற்கடித்து விடவேண்டும் என்று பெரும் படை திரட்டினர். இதைத் தெரிந்து கொண்ட பண்டாரகவன்னியன், ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை, 1803-ம் ஆண்டில் தாக்கினான். காப்டன் ரிபேக் தலைமையில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும், பண்டாரகவன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்தது. பண்டாரகவன்னியன் வெற்றி பெற்றான். வெள்ளையர் படை பின்வாங்கி ஓடியது.
மும்முனைத் தாக்குதல்….
வெள்ளையர் பண்டாரகவன்னியனை எதிர்க்க புதிய வியூகம் வகுத்தனர். யாழ்பாணம், மன்னார், திரிகோணமலை என்ற மூன்று இடங்களில் இருந்தும் வெள்ளையர்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துச் சென்று, பண்டாரகவன்னியனை தாக்கினர்.
வெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும் போது, பண்டாரகவன்னியனின் படை மிகச் சிறியது. இருப்பினும், அஞ்சாமல் வீரப்போர் புரிந்தான்.
போரில் பண்டாரகவன்னியன் படுகாயம் அடைந்தான். அவனுடைய வீரர்கள், பனங்காமம் என்ற இடத்துக்கு பண்டாரகவன்னியனை தூக்கிச் சென்றனர். சிகிச்சை அளித்து குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை.
1803ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பண்டாரக வன்னியன் உயிர் பிரிந்தது.
பண்டாரகவன்னியன் மாண்ட இடத்தில் ஒரு நடு கல் உள்ளது. அதில், “இந்த இடத்தில் பண்டாரகவன்னியனை கேப்டன் வான் டெரிபெர்க் தோற்கடித்தான்” என்று குறிப்பிட்டுள்ளது.
மாவீரன் பண்டாரவன்னியனின் வீரவணக்க நாள்
Reviewed by NEWMANNAR
on
October 31, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 31, 2015
Rating:





No comments:
Post a Comment