அண்மைய செய்திகள்

recent
-

ஷேன் வார்னே வெளியிட்ட 25 ஆண்டுகளில் சிறந்த இலங்கை அணி: அர்ஜூன ரணதுங்காவுக்கு இடமில்லை!


கடந்த 25 ஆண்டுகளில் சிறந்த 11 பேர் கொண்ட இலங்கை அணியை அவுஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் கூறுகையில், "நான் விளையாடியதில் சிறந்த இலங்கை அணியை குறிப்பிட்டுள்ளேன். இது தான் 25 ஆண்டுகளில் சிறந்த இலங்கை அணியாகும்.

பந்து வீச்சில் கடைசி இடத்தை நிரப்புவது கடினமாக இருந்தது. இருப்பினும் அந்த இடத்தில் நுவன் ஜோய்சாவை தெரிவு செய்தேன். அவர் பார்க்கவும் வித்தியாசமாக, நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்துவீசுவார்.

அதே சமயம் சனத், டில்ஷான் மற்றும் அரவிந்த ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் அசத்துவார்கள்.

மேலும், உலகக்கிண்ணம் வென்று கொடுத்த அர்ஜூன ரணதுங்க இலங்கை அணிக்கு அதிகம் பங்களிப்பு செய்துள்ளார். ஆனால் துரதிருஷ்டவமாக அவருக்கு இதில் இடம் இல்லை. கடைசி நேரத்தில் அவர் துடுப்பாட்டத்தில் ஜொலிக்கவில்லை.

தற்போதைய இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ்க்கு எதிராக நான் விளையாடியது இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஷேன் வார்னேவின் இலங்கை அணி:-

மார்வன் அத்தபத்து, சனத் ஜெயசூரிய, அசங்க குருசின்கா, குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்), அரவிந்த டி சில்வா, மஹேல ஜெயவர்த்தனே (அணித்தலைவர்), டில்ஷான், சமிந்தா வாஸ், மலிங்கா, முத்தையா முரளிதரன், நுவான் ஜோய்சா.

ஷேன் வார்னே வெளியிட்ட 25 ஆண்டுகளில் சிறந்த இலங்கை அணி: அர்ஜூன ரணதுங்காவுக்கு இடமில்லை! Reviewed by Author on October 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.