அண்மைய செய்திகள்

recent
-

நவம்பர் 13இல் இலங்கைக்கு அருகே பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்...


விண்வெளியில் உள்ள மர்மப் பொருள் ஒன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு அண்மையிலான கடற்பகுதியில் விழுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
WT1190F என பெயரிடப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு மீட்டர்கள் நீளமுடைய குறித்த விண் மர்மப் பொருள் எவ்வாறு உருவானது என்பது குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இவ்வாறான மர்மப் பொருட்கள் விண்வெளி கழிவுகள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விண்வெளி மர்மப் பொருள் எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை நேரப்படி முற்பகல் 11.50 அளவில் தெற்கு கடற்பரப்பில் 65 கிலோமீற்றர் தொலைவில் விழும் என எண்ணப்படுவதாக விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக புகழ் பெற்ற சர்வதே சஞ்சிகை மூலம் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரித்தானியாவின் பிரபல ஊடகங்கள் இந்த செய்தியை பரவலாக பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விண்வெளி மர்மப் பொருள் முதன் முதலாக 2012ஆம் ஆண்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதனை ஹவாய் எனப்படும் பாரிய தொலைநோக்கி மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விண்வெளி மர்மப் பொருளினால் இந்த நாட்டு மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாதென கூறப்படுகின்றது.



நவம்பர் 13இல் இலங்கைக்கு அருகே பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள்... Reviewed by Author on October 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.