அமைச்சர் டெனிஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் கிராம அமைப்புக்களுக்கு உதவித்திட்டங்கள் - மன்னார் மாவட்டத்தில்.-Photos
வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் அவர்களின் வருடாந்த பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை மூலம் மன்னார் மாவட்டத்தில் இருந்து உதவித்திட்டங்களை கோரி விண்ணப்பித்திருந்த சங்கங்கள், பொது அமைப்புக்கள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களுக்கான  சீமெந்து மற்றும் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு 17-10-2015 சனிக்கிழமை மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் பொருட்கள் வளன்கிவைக்கப்பட்டது, இதனடிப்படையில் வழங்கப்பட்ட அமைப்புக்கள் வருமாறு, பிள்ளையார் கோவில் பரப்புக்கடந்தான், அம்மன் கோவில் பரப்புக்கடந்தான், முருகன் கோவில் கீரி ஆகிய கோவில்களுக்கு கட்டுமான பணிக்கு சீமெந்து பைகளும், ஜிம்ப்ரோன் நகர் கிராம அபிவிருத்தி சங்கம், ஜீவபுரம் கிராம அபிவிருத்தி சங்கம், கீரி கிராம அபிவிருத்தி சங்கம், பேசாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், அமல உற்பவ கன்னி மரியாள் சமூக மற்றும் கல்விப் பணிகளுக்கான அமைப்பு, முள்ளிக்குளம் அருட் சகோதரி கல்விப்பணி, பள்ளிமுனை முதியோர் சங்கம் ஆகியவற்றுக்கு கதிரைகளும் வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு அமைச்சின் பிரதம கணக்காளர் திருமதி.அனந்தகிருஷ்ணன் அவர்களும், அமைச்சின் உதவி திட்ட பணிப்பாளர் திரு.சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் டெனிஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் கிராம அமைப்புக்களுக்கு உதவித்திட்டங்கள் - மன்னார் மாவட்டத்தில்.-Photos
 Reviewed by NEWMANNAR
        on 
        
October 19, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
October 19, 2015
 
        Rating: 
       
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment