போலந்து பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி...
போலந்து பாராளுமன்றத் தேர்தலில் பழைமைவாத எதிர்க்கட்சியான சட்டமும் நீதியும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியான பெறுபேறுகளின் பிரகாரம் அந்தக் கட்சி 39 சதவீத வாக்குகளைப் பெற்றுள் ளது.
அந்தக் கட்சி பாராளுமன்றத்தில் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆசனங்களைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கட்சியின் தலைவர் ஜரோஸ்லோ கக்சின்ஸ்கி பிரதமர் வேட்பாளராக தனது உறவினரான பீற்றா ஸசிட்லோவை தெரிவு செய்திருந்தார்.
இந்நிலையில் பதவியை விட்டு வெளியேறிச் செல்லும் பிரதமர் ஈவா கொப்பாக்ஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.
சட்டமும் நீதியும் கட்சியானது கிராமப் பிராந்தியங்களில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
ஜரோஸ்லோ கக்சின்ஸ்கி 2001 ஆம் ஆண்டில் தனது சகோதரரான லெச் கக்சின்ஸ்கியுடன் இணைந்து சட்டமும் நீதியும் கட்சியை ஸ்தாபித்திருந்தார்.
அவர் 2006/-2007 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தனது சகோதரர் லெச் ஜனாதிபதியாக பதவி வகித்த கால கட்டத்தில் பிரதமராக பதவி வகித்திருந்தார்.
லெச் 2010 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத் தில் உயிரிழந்தார்.
தேர்தல் வெற்றி யையடுத்து ஜரோ ஸ்லோ கக்சின் ஸ்கி உரையாற் றுகையில், தமது அரசாங்கம் சட்ட அமுலாக் கத்தில் கவனம் செலுத்தும் என
வும் பழிவாங் கும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறினார்.
“தமது சொந்தத் தவறுகளால் விழுந்தவர்களை உதைக்கும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது" என அவர் குறிப்பிட்டார்.
அதேசமயம் புதிய பிரதமராக தெரிவாகியுள்ள பீற்றா ஸசிட்லோ, தனக்கு ஆதரவு வழங்கியமைக்காக போலந்து மக்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
''மறைந்த ஜனாதிபதி லெச் கக்சின்ஸ்கியைப் பின்பற்றி எமக்கு முன்னாலுள்ள அனைத்து சவால்களையும் எதிர் கொள்வோம்'' என அவர் கூறினார்.
"போலந்து மக்கள் தமது எதிர்பார்ப் புகள் மற்றும் தேவைப்பாடுகள் குறித்து எமக்குத் தெரிவித்து எமக்கு வாக்களித் திருக்காவிட்டால் நாம் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது" என அவர் தெரிவித்தார்.
போலந்து பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி...
Reviewed by Author
on
October 27, 2015
Rating:

No comments:
Post a Comment