புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த,அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மன்-அந்தோனியார் புரம் அ.த.க பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு.(படம் இணைப்பு)
இவ்வருடம் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மற்றும் அதி கூடிய புள்ளிகளைப்பெற்ற மன்னார் அந்தோனியார் புரம் அ.த.க பாடசாலை மாண,மாவிகள் கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் புனித அந்தோனியார் புரம் ஆலயத்தில் இடம் பெற்றது.
மன்னார் அந்தோனியார் புரம் அ.த.க பாடசாலையின் அதிபர் என்.யேசுநவநீதன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ்,சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஞா.குணசீலன்,கௌரவ விருந்தினர்களாக சோபா அமைப்பின் சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஜோர்ச் அந்தோனிப்பிள்ளை,மன்னார் நகர சபையின் முன்னால் உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ்,மாந்தை மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி இ.முடியப்பு,மடு வலய ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் ஜீ.கோமஸ் பெரேரா,அந்தோனியார் புரம் பங்குத்தந்தை அருட்தந்தை ரஜனிகாந்த் அடிகளார்,இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகள் மற்றும் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகள் மாலை அணிவிக்கப்பட்டு பாடசாலையில் இருந்து அந்தோனியார் புரம் ஆலயத்திற்கு ஊர்வலமாக அலைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த மாணவர்களுக்காக அருட்தந்தை ரஜனிகாந்த் அடிகளார் அவர்களினால் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சித்தியடைந்த மற்றும் அதி கூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-மன்னார் நிருபர்-
(29-10-2015)
மன்னார் அந்தோனியார் புரம் அ.த.க பாடசாலையின் அதிபர் என்.யேசுநவநீதன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ்,சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஞா.குணசீலன்,கௌரவ விருந்தினர்களாக சோபா அமைப்பின் சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஜோர்ச் அந்தோனிப்பிள்ளை,மன்னார் நகர சபையின் முன்னால் உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ்,மாந்தை மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி இ.முடியப்பு,மடு வலய ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் ஜீ.கோமஸ் பெரேரா,அந்தோனியார் புரம் பங்குத்தந்தை அருட்தந்தை ரஜனிகாந்த் அடிகளார்,இலுப்பைக்கடவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகள் மற்றும் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகள் மாலை அணிவிக்கப்பட்டு பாடசாலையில் இருந்து அந்தோனியார் புரம் ஆலயத்திற்கு ஊர்வலமாக அலைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த மாணவர்களுக்காக அருட்தந்தை ரஜனிகாந்த் அடிகளார் அவர்களினால் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து சித்தியடைந்த மற்றும் அதி கூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-மன்னார் நிருபர்-
(29-10-2015)
புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த,அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மன்-அந்தோனியார் புரம் அ.த.க பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு.(படம் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
October 29, 2015
Rating:
No comments:
Post a Comment