வட மாகாண அரச கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி....
வட மாகாண அரச சேவையில் உள்ள கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியது.
பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் JICA நிறுவனத்தின் நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையுடனும் SLIDA நிறுவனத்தின் அனுசரணையுடனும் நடாத்தப்படும் அரச சேவையில் உள்ள கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி வடக்கு , கிழக்கு , வடமத்திய மாகாணங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
பத்து நாட்களை கொண்ட ஒவ்வொரு பயிற்சி அமர்வும் ஐந்து பாட நெறிகளை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் இதுவரை 17 அமர்வுகள் நிறைவு செய்யப்பட்டு உள்ளது இதில் ஐநூறு வரையான கள உத்தியோகத்தர்கள் பங்குபற்றி உள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக 18 வது அமர்வு கிளிநொச்சி கள உத்தியோகர்களுக்கு கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 8.30 மணியளவில் வட மாகாண முகாமைத்துவ பயிற்சி அலகு இயக்குனர் திரு. கைலாசபிள்ளை சிவகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வட மாகாண அரச கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி....
 Reviewed by Author
        on 
        
November 05, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 05, 2015
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
November 05, 2015
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 05, 2015
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment