வேற்று கிரகத்தில் இருந்து வந்த முதல் அபூர்வ சமிக்ஞை : விஞ்ஞானிகள் ஆய்வு....

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.
இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வானியல் விஞ்ஞானிகள் விண்வெளியில் வரும் வேற்று கிரகவாசிகளின் சமிஞ்சைகளை அறிய கருவிகளை கண்டறிந்து உள்ளனர்.
வேற்று கிரகங்களிலும் மக்கள் வாழ்கின்றனரா என்பது குறித்து அமெரிக்காவின் ’நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. நாசாவும் அதன் பங்கு நிறுவனங்களின் நிபுணர்கள் இணைந்து விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ள ’ரோடு- மேப்’ அமைந்துள்ளனர். அதன் வழியாக சக்தி வாய்ந்த அதிநவீன தொலை நோக்கிகளை நிறுவியுள்ளனர்.
இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி ஸ்டீபன் ஹோக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார்.
இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரூ.640 கோடி செலவிடப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார்.
இந்த திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த வானவியலாளர், காஸ்மோலாகிஸ்ட் பேராசிரியர் லோர்டு மார்ட்டீன் ரீஸ், தலைமை தாங்குகிறார்.
இந்த திட்டத்தின் மூலம் அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210 அடி ) பார்க் தொலைநோக்கி மூலமும், மேற்கு வர்ஜினியாவில் 100 மீட்டர் (328 அடி) பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும் நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது.
வேற்று கிரகவாசிகள் குறித்த ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகளின் நீண்ட கால முயற்சிக்கு தற்போது பலன்கிடைத்துள்ளது. அவுஸ்திரேலியா நாட்டில் நியூசவுத் வேல்ஸ் பகுதியில் நிறுவபட்டு உள்ள பார்க் ரேடியோ தொலைநோக்கிக்கு ஒரு அன்னிய இரட்டை சமிக்ஞை கிடைத்துள்ளது.
இது விஞ்ஞானிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவேற்று கிரகவாசிகளிடம் இருந்து வந்துள்ள சமிக்ஞை தான் என நம்புகின்றனர். விஞ்ஞானிகள் பார்க்ஸ் ரேடியோ தொலைநோக்கிக்கு வந்துள்ள தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் 11 அடையாளம் தெரியாத நிலையற்ற வானொலி தரவுகள் பதிவு செய்யபட்டுள்ளன.
மெல்போர்ன் சுவின்பர்ன் பல்கலைக்கழக எமிலி பெட்ரோப் குழுவினர் இந்த சமிக்ஞையை கண்டறிந்துள்ளனர். இந்த சமிக்ஞையை பதிவு செய்த பின் இது வேற்று கிரகவாசிகளிடம் இருந்து வந்த குறிப்பிட தக்க சமிக்ஞை என நம்புகின்றனர்.
வேற்று கிரகத்தில் இருந்து வந்த முதல் அபூர்வ சமிக்ஞை : விஞ்ஞானிகள் ஆய்வு....
Reviewed by Author
on
November 28, 2015
Rating:
Reviewed by Author
on
November 28, 2015
Rating:


No comments:
Post a Comment