பொது இடங்களில் இனி சிறுநீர் கழிக்க முடியாது: அதிர்ச்சி பாடம் கற்பித்த ஜேர்மன் தொழில்நுட்பம்...
ஜேர்மனி நாட்டில் பொது இடங்களில் அநாகரீகமாக சிறுநீர் கழிப்பவர்களுக்கு அதிர்ச்சி பாடம் கற்பிக்கும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பம் ஒன்று அந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனி நாட்டில் உள்ள Cologne நகரின் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களின் அநாகரீகமான செயல் பொதுமக்களை பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறது.
குறிப்பாக, Deutsche Bahn என்ற முக்கிய முக்கிய ரயில் நிலையத்தின் சுற்றுப்புறங்களில் சிறுநீர் கழிப்பது தொடர் வாடிக்கையாக வருகிறது.
பொறுப்பற்ற இந்த செயலை தடுக்கும் விதத்திலும், பொதுஇடங்களில் சிறுநீர் கழிக்கும் நபர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அந்த ரயில் நிலைய அதிகாரிகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ரயில் நிலையங்களின் சுற்றுப்புர சுவர்களில் நவீன ஹைட்ரோஃபோபிக் என்ற வண்ணம்(Painting) பூசப்பட்டுள்ளது.
இவ்வாறு வண்ணம் பூசப்பட்ட சுவர்கள் மீது சிறுநீர் கழித்தால், அது சுவரில் பட்டு எதிரொலித்து சிறுநீர் கழிக்கும் நபர்கள் மீது தெறித்து விழுந்து அசுத்தும் ஏற்படுத்துமாறு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன வண்ண பூச்சானது, ரயில் நிலையத்தில் உள்ள சுவர்களில் சுமார் 30 மீற்றர் பரப்பளவிற்கு பூசப்பட்டுள்ளது.
இந்த வண்ணம் பூசப்பட்ட சுவற்றின் மீது ‘இந்த சுவற்றின் மீது சிறுநீர் கழித்தால், அது உங்கள் மீது திருப்பி வீசும் என்ற எச்சரிக்கை வாசகங்களும் ஒட்டப்பட்டுள்ளது.
ஆனால், இந்த எச்சரிக்கை வாசகங்களை நம்பாமல் சிலர் சுவற்றின் மீது சிறுநீர் கழித்தாகவும், அது அவர்கள் மீது தெறித்து விழுவதும், அதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓடுவதையும் அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
பல வருடங்களாக நீடித்து வந்த இந்த அசுத்தமான நிலைக்கு தற்போது விடிவு காலம் ஏற்பட்டுள்ளதாக அந்நகர மக்கள் உற்சாகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் இனி சிறுநீர் கழிக்க முடியாது: அதிர்ச்சி பாடம் கற்பித்த ஜேர்மன் தொழில்நுட்பம்...
Reviewed by Author
on
November 28, 2015
Rating:
Reviewed by Author
on
November 28, 2015
Rating:


No comments:
Post a Comment