அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழா-20-12-2015


சிவபூமியாம் மன்னாரில் வருடாவருடம் நடைபெறுகின்ற நாவலர் விழா இம்முறையும் 09 வது தடவையாக இன்று காலை 10-00 மணியளவில் மன்-சித்திவிநாயர் தேசிய பாடசாலை அரங்கில் தமிழ்தொண்டாற்றிய தமிழ்ப்பெருமகான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது…
விழாவிற்கு ஆழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலாசாரமுறைப்படி மாலையிட்டு வரவேற்கப்பட்டதோடு வாயிலில் அமைந்திருக்கும் ஆறுமுகநாவலரின் திருச்சிலைக்கு மாலையணித்து தீப ஆராதனையுடன் இடபக்கொடியினை அன்னையில்லத்தின் ஸ்த்தாபகர் பிருந்தாவன் ஐயா அவர்கள் ஏற்றிவைக்க விருந்தினர்கள் மங்கள விளக்கினை ஏற்றிவைத்தனர்.
வரவேற்புரையினை ம.நடேசானந்தன் வழங்க வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது

தலைமையுரையினை மகாஸ்ரீ தர்மகுமாரகுருக்கள் வழங்கியதுடன்
பிரதமர் உரையினை  கே-எஸ்-வசந்தகுமார் பிரதேசசெயலாளர் வழங்கினார்
வவுனியாவில் இருந்து வருகை தந்திருந்த தமழ்மணி தமிழருவி சிவகுமாரன் அவர்கள் “நாவலரும் வள்ளுவரும்” எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் நடனங்கள் வில்லிசை பேச்சு என்பன சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக
இறைபணியாளர் விருது-திருமதி காமாட்சி போசாலை ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் சிறந்த சிவதொண்டாற்றியமைக்காக வழங்கப்பட்டதோடு....

நாவலர் நினைவு விருது- மன்-சித்திவிநாயகர் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும் தற்போது யாழ்-இந்துக்கல்லூரியின் அதிபருமாகிய ஏ-ஐ-தயானந்த ராஜா அவர்களின் 32 வருட கல்வியுடன் சமயத்தொண்டாற்றியமைக்காக வழங்கப்பட்டது.

மேலும் சிறப்பம்சமாக யுத்தகாலங்களில் இருந்து இன்று வரை எந்த சலுகை எதிப்பார்ப்பின்றி அறநெறி சயமபாடத்தினை கற்றுக்கொடுக்கின்ற 05 ஆசிரியர்களை வருடாவருடம் நினைவுச்சின்னமும் பாரட்டுப்பத்திரத்துடன் பொன்னாடைபோர்த்தி கௌரவிப்பது வழக்கம் இம்முறையும் தெரிவு செய்யப்பட்ட----
    செல்வி தவயோகராசா சுவைதா வெள்ளாங்குளம் ஐங்கரன் அறநெறிப்பாடசாலை
    திருமதி சிவரூபசர்மா சிறீராஐPனி தலைமன்னார் ஸ்ரீதேவி முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை
    திருமதி நாகேஸ்வரன் சுமதி ஸ்ரீ முத்துமாரியம்மன் செட்டியார் கட்டையடம்பன் அறநெறிப்பாடசாலை
    செல்வி இராமநாதன் பத்மலா அருள்மிகு அரசடி சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலை இத்திக்கண்டல் புளியங்குளம்
    திருமதி- வசந்தகுமார் சுப்புலெட்சுமி பிள்ளையார்பிட்டி ஞானவாணி அறநெறிப்பாடசாலை
2015க்கான சிறந்த ஆசிரியர்களாக கௌரவிக்கப்பட்டனர்
இந்நிகவில் இந்து சமயப்பெரியோர்கள் மருத்துவ காலாநிதிகள் பெரியோர்கள் மாணவர்கள் மாணவிகள் அனைவரும் கலந்து சிறப்பித்த்னர்
நிகழ்வின் சாரம்சமாக நாவலர்காட்டிய வழியில் சிறப்பான தமிழோடு உன்னதமான உயர்ந்த பண்புகளையுடைய இந்துக்களாக வாழ்வோம் வளர்வோம் மேன்மைகொள் சைவநீதி துலங்குக உலகமெல்லாம் எனும் மகுடவாசகத்தினை நினைவில் நிறுத்தியவர்களாக விழா இறுதித்தேவாராத்துடன் இனிதே நிறைவேறியது…
  
நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு---
                   மன்னார் மாவட்ட அறநெறிப்பாடசாலைகள் இணையம்
                  மன்னார் மாவட்ட சிவபூமி இந்து இளைஞர் மன்றம்










மன்னாரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் விழா-20-12-2015 Reviewed by Author on December 20, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.