அண்மைய செய்திகள்

recent
-

மலரும் அரும்புகள் அபிவிருத்தி நிகழ்வு - 2015

மன்னார் எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளியின் வருடாந்த மலரும் அரும்புகள் அபிவிருத்தி நிகழ்வு கடந்த

05.12.2015 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வு புனித செபஸ்தியார் பேராலய உதவிப்

பங்குத்தந்தையர்கள் தலைமையில் ஆரம்பமானது. இதற்கு பலர் வருகை தந்திருந்தனர்,

இந்நிகழ்வு எல்லோராலும் வியக்கும் வண்ணம் எமது சிறார்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டனர். அத்துடன் கண்கவர்

நடனங்கள் சிறார்களினால் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் இடம்பெற்றது. அத்துடன் 2016ம் ஆண்டு தரம் 1

செல்கின்ற சிறார்களுக்கு பட்டமளிப்பு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் சிறுவர்களுக்கு பல பரிசில்கள்

வழங்கப்பட்டது. அத்துடன் நத்தார் தாத்தாவினாலும் பரிசில்கள் வழங்கப்பட்டது

மற்றும் அதிஸ்ட இலாபச்சீட்டிழுப்பும் இடம்பெற்று பரிசில்கள் வழங்கப்பட்டது.

குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.



முன்பள்ளி முகாமைத்துவ குழு,

பூண்டி மாதா முன்பள்ளி,

எமில்நகர், மன்னார்.














மலரும் அரும்புகள் அபிவிருத்தி நிகழ்வு - 2015 Reviewed by NEWMANNAR on December 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.