அண்மைய செய்திகள்

recent
-

விபசார நிலையங்களை நடாத்தும் இலங்கை நடிகைகள்..! அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின


கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் மசாஜ் நிலையங்களில் விசேட பொலிஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், பல மசாஜ் நிலையங்களில் விபசாரம் இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறு   20க்கும் மேற்பட்ட  மசாஜ் நிலையங்கள் இலங்கையில் உள்ள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகைகளால் நடாத்தப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

திரைப்படத்துறை என்பது உண்ணதமான துறையாகும். அத்துறையில் பணியாற்றும் நபர்களுக்கு சமூதாயத்தில் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார நிலையங்கள் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி  நடிகைகளால் நடாத்தப்பட்டு வருகின்றமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி நாடகங்களில் நடிப்பதற்கு என நேர்முகப் பரீட்சை வைத்து வெளிமாவட்டங்களிருந்து அழகிய இளம்பெண்கள் வரவழைக்கப்பட்டு கவர்ச்சிகரமான சம்பளத்தை கொடுத்து அவர்களை இவ்வாறு பாலியல் நடவடிக்கைளில் ஈடுபட வைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிசை, பிலியந்தலை, கொஹ{வல, பத்தரமுல்ல, கடுவெல மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த மசாஜ் நிலையங்களை நடாத்திச் செல்ல உயர் வர்க்கத்தினர் ஆதரவு வழங்குவதாகவும்  பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையங்களில் இளம் பெண்கள் ஒரு மணிநேர அடிப்படையில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

 இச்சம்பவம் தொடர்பில் பல நடிகைகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விபசார நிலையங்களை நடாத்தும் இலங்கை நடிகைகள்..! அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின Reviewed by Author on December 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.