அண்மைய செய்திகள்

recent
-

பாப்பாண்டவருடன் ஜனாதிபதி சந்திப்பு...


வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாப்பரசர் புனித பிரான்சிஸ் அவர்களை சந்தித்துள்ளார்.
புனித பாப்பரசரின் அழைப்பையேற்று வத்திக்கானுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இத்தாலியைச் சென்றடைந்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவருக்கும் புனித பாப்பரசருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

வடக்கு கிழக்கின் அபிவிருத்தி,  நாட்டின் ஜனநாயக முன்னேற்றங்கள், கால நிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்த விடயங்களை புனித பாப்பரசருடன் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


பாப்பாண்டவருடன் ஜனாதிபதி சந்திப்பு... Reviewed by Author on December 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.