பாரீஸ் சர்வதேச பருவநிலை மாநாட்டில் புவி வெப்பமயமாவதை குறைக்க உறுதி...

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 1-ம் திகதி பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சீனா, இந்தியா உள்ளிட்ட 196 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
2 வாரங்கள் நடந்த இந்த மாநாட்டில் புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டுமென்று பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் வரைவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, புவி வெப்பமயமாவதைத் தடுக்க 2020-ஆம் ஆண்டு முதல் வளரும் நாடுகளுக்கு ரூ.6,70,000 கோடி ஆண்டுதோறும் வழங்கப்படும். முன்னதாக,புவி வெப்பமயமாவதை 1.5 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டுமென்று கூறப்பட்டு அது தொடர்பான அறிக்கை அனைத்து நாடுகளின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது.
புவி வெப்பமயமாவதை 1.5 டிகிரி செல்சியஸாகக் குறைக்க வேண்டுமென்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால் இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் நிலக்கரி போன்ற எரிபொருளைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்.
எனவே, வளரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் இதனை ஏற்க மறுத்ததால் வரைவு ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்தது.
இதனால் டிசம்பர் 11-ஆம் தேதியுடன் முடிவடைய வேண்டிய மாநாடு மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டும் என்ற வரைவு ஒப்பந்தம் மூலம் நீண்ட காலத்துக்கு நிலக்கரி உள்ளிட்ட எரிபொருள்களைப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ் இது தொடர்பான வரைவு ஒப்பந்தத்தை வாசித்தார். பிரான்ஸ் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் தீர்மானத்துக்கு ஆதரவு கோரினார். ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தார்.
வரைவு ஒப்பந்தத்தை சமர்ப்பித்து லாரன்ட் ஃபேபியஸ் பேசியதாவது, "13 நாள்கள் நீடித்த கடினமான விவாதங்கள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த வரைவு ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது நீண்டகாலம் கடைப்பிடிக்க வேண்டிய நியாயமான, சட்டபூர்வமான ஒப்பந்தம். இப்போது புவி வெப்பமயமாவதை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க ஒப்பந்தம் வரைவு செய்யப்பட்டுள்ளது.
புவி வெப்பமயமாவதைத் தடுக்க உதவும் வகையில் 2020-ஆம் ஆண்டில் இருந்து வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 10,000 கோடி டாலர் வழங்கப்படும் என்று கூறினார்.
பாரீஸ் சர்வதேச பருவநிலை மாநாட்டில் புவி வெப்பமயமாவதை குறைக்க உறுதி...
Reviewed by Author
on
December 13, 2015
Rating:

No comments:
Post a Comment