நத்தார் தினத்திற்கு முதல் நாள் பூமியை கடக்கவுள்ள விண்கல்...
எதிர்வரும் நத்தார் தினத்திற்கு முதல் நாள் மாலை 1.5 மைல் விட்டமுடைய விண்கல்லொன்று பூமிக்கு அண்மையில் கடந்து செல்லவுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
163899 என அறியப்படும் இந்த 1.5 மைல் அகலமான 2003 எஸ்.டி.220 விண்கல் 6.7 மில்லியன் மைல் தொலை வில் பூமியை கடந்து செல்லவுள்ளது.
இந்தத் தூரம் பூமியிலிருந்து சந்திரன் உள்ள தூரத்திலும் 28 மடங்கு அதிகமாகும்.
மேற்படி விண்கல் பூமியிலிருந்து மிகவும் தூரத்தில் கடந்து செல்கின்ற போதும் அந்த விண்கல்லால் பூமியில் பூமியதிர்ச்சிகள் மற்றும் எரிமலைக் குமுறல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் விண்கல் கடந்து செல்வதற்கும் எரிமலைக் குமுறல் மற்றும் பூமியதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளமைக்கான விஞ்ஞான பூர்வமான சான்றுகள் எதுவும் இதுவரை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
நத்தார் தினத்திற்கு முதல் நாள் பூமியை கடக்கவுள்ள விண்கல்...
Reviewed by Author
on
December 19, 2015
Rating:

No comments:
Post a Comment