வெள்ளத்தில் மூழ்கியது பளைப் பிரதேசத்தின் இத்தாவில் கிராமம்..!
கடந்த பல நாட்களாக பெய்து வருகின்ற செறிவான மழை பொழிவு காரணமாக பளைப் பிரதேசத்தின் இத்தாவில் கிராமம் அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளது.
அண்மையில் குடியேற்றப்பட்ட இக்கிராமத்துக்கு அடிப்படையான உடகட்டமைப்புக்கள் எவையும் இல்லை வீதிகளோ, வடிகால்களோ கிடையாது.
இராணுவத்தால் அமைக்கப்பட்ட மண் அரண்கள் இந்த கிராமத்தை சூழ காணப்படுவதுடன், யுத்தத்தின் போது பொழியப்பட்ட குண்டுகளால் நிலங்கள் குண்டும், குழியுமாக காணப்படுவதால் வெள்ள நீர் தேங்கி நின்று குடியிருப்புக்களையும் பாதைகளையும் மூடிவிட்டது.
இதனால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்குவதுடன், குழந்தைகளை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதற்கு மிகுந்த கஸ்டங்களை அனுபவிக்கின்றனர்.
இதன் நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் அணித்தலைவர் சுரேன் தலைமையிலான குழு அங்கு சென்று பிரதேச சபையுடன் தொடர்பு கொண்டு சிரமதானம் மூலமும், இயந்திரங்கள் மூலமும் வாய்க்கால்களை வெட்டி நீரை தற்காலிகமாக வெளியேற்றியுள்ளனர்.
இதன்போது இளைஞர் அணித்தலைவர் சுரேன், பளைப் பிரதேச இளைஞர் அணித்தலைவர் மு.கஜன, கிராம அலுவலகர், சமுர்த்தி உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ பணியாளர்கள், கிராம மக்கள் மற்றும் இளைஞர்களும் உதவி புரிந்தனர்.
வெள்ளத்தில் மூழ்கியது பளைப் பிரதேசத்தின் இத்தாவில் கிராமம்..!
Reviewed by Author
on
December 03, 2015
Rating:
Reviewed by Author
on
December 03, 2015
Rating:



No comments:
Post a Comment