நத்தார் தினத்தன்று அரிய நிகழ்வு : தவற விடாதீர்கள்...
உலகம் முழுவதும் வருகிற 25 ஆம் திகதி நத்தார் கொண்டாடப்படவுள்ளது. இவ்வருடம் நத்தார் தினத்தன்று பௌர்ணமி வருவது மிக அரிய நிகழ்வு என அமெரிக்க விண்வெளி மையமான நாசா அறிவித்துள்ளது.
கடந்த 1977ம் ஆண்டு பிறகு இதுபோன்ற அரிய நிகழ்வு இவ்வருடம் நடைபெறுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கையில், 2034ம் ஆண்டுவரை இந்நிகழ்வு நடைபெறாது. எனவே அன்றைய தினம் தோன்றும் நிலவை காண தவற விடாதீர்கள். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவில் குளிர்காலத்தின் ஆரம்பத்தில் தோன்றுவதால் Full Gold Moon என அழைக்கப்படுகிறது.
நத்தார் தினத்தன்று அரிய நிகழ்வு : தவற விடாதீர்கள்...
Reviewed by Author
on
December 20, 2015
Rating:

No comments:
Post a Comment