அண்மைய செய்திகள்

recent
-

விண்வெளியில் தண்ணீரை பந்தாக மாற்றி ‘டென்னிஸ்’ விளையாடிய வீரர்...


பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி வீரர் ஒருவர் தண்ணீரை பந்தாக மாற்றி ‘டேபிள் டென்னிஸ்’ விளையாடிய அற்புதக்காட்சி தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.
விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கப்பட்டு அது தற்போது பூமியிலிருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் சுற்றி வருகிறது.

இந்த ஆய்வு மையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்களில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்கோட் கெல்லி என்பவரும் ஆவார்.

நேற்றைய தினம் முதல் ஸ்கோட் கெல்லி விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சென்று 300 நாட்கள் நிறைவடைந்துள்ளது. எனினும், அடுத்த 2 மாதங்கள் அங்கேயே தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், தனது 300வது நாளை நினைவுக்கொள்ளும் வகையில், ஸ்கோட் கெல்லி ஒரு அற்புதமான செயலை செய்து அதனை வீடியோ பிடித்து வெளியிட்டுள்ளார்.

அதாவது, தண்ணீர் துளிகளை பந்தாக மாற்றி பிங் பாங் எனப்படும் ‘டேபிள் டென்னிஸ்’ விளையாட்டை விளையாடி அசத்தியுள்ளார். இதற்கு இரண்டு தொழில்நுட்பம் சார்ந்த மட்டைகளையும் அவர் உபயோகப்படுத்தியுள்ளார்.

விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாததால், அங்கு தண்ணீர் துளிகள் முதற்கொண்டு அனைத்து பொருள் மற்றும் திரவங்களும் மிதக்கும் என்பதால் ஸ்கோட் கெல்லி இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.




விண்வெளியில் தண்ணீரை பந்தாக மாற்றி ‘டென்னிஸ்’ விளையாடிய வீரர்... Reviewed by Author on January 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.