அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணம் சுதுமலை மேற்கில் தந்தை கண்டித்ததை தாங்காது மகள் தற்கொலை... ...


படிக்காது படம் பார்த்துக்கொண்டிருந்த மகளை தந்தை கண்டித்ததையடுத்து தாங்க முடியாத மகள் வீட்டு யன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் சுதுமலை மேற்கில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோவிலுக்கு சென்று விட்டு தந்தை வீடு திரும்பிய நிலையில் குறித்த மகள் படிக்காது  படம் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.

இதை அவதானித்த தந்தை தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு  மகளை படிக்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து வழமை போன்று மகள் தனது அறைக்குள் சென்று கதவைப்பூட்டிவிட்டு   தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரவு 8 மணியளவில் தாயார் மகளுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அழைத்தபோது  மகள் அறையைவிட்டு வெளியே வரவில்லை.

இந்நிலையில், அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது யன்னலில் தூக்கிட்ட நிலையில் மகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகளை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்ட போதிலும் மகளை காப்பாற்ற முடியவில்லை.

மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் இன்று திங்கட்கிழமை, நீதிமன்ற பணிப்புரைக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையையடுத்து சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சுதுமலை மேற்கில் தந்தை கண்டித்ததை தாங்காது மகள் தற்கொலை... ... Reviewed by Author on January 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.