அண்மைய செய்திகள்

recent
-

ஆப்பிளை பழிவாங்கியது சாம்சங் 100 கோடி டாலர் நஷ்டஈடை சில்லரையாக கொடுத்தது


 இது இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்.

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்.சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது. கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆப்பிள் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் (6,200 கோடி) அபராதமாக அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பானது.

சாம்சங் நிறுவனத்தின் 26 வகையான ஸ்மார்ட் போன்களில் ஆப்பிள் நிறுவன தொழில்நுட்பம் காப்பியடிக்கப்பட்டு இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.இந்த நிலையில், கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்துக்கு 30 லாரிகள் வந்தன. அங்கிருந்த செக்யூரிட்டி, அட்ரஸ் மாறி வந்து விட்டதாக கூறியிருக்கிறார். தங்களிடம் இந்த அட்ரஸ்தான் கொடுக்கப்பட்டுள்ளதாக லாரி டிரைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போதுதான் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக்குக்கு ஒரு போன் வந்துள் ளது. சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ குவான் கியூன் பேசினார். உங்களுக்கு தர வேண்டிய நஷ்ட ஈட்டைத்தான் அனுப்பியிருக்கிறோம்.

பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.அத்தனை லாரிகளிலும் சில்லரை காசுகள். 5 சென்ட் நாணயங்கள். மொத்தம் 2 ஆயிரம் கோடி காசுகள். ஆப்பிள் நிறுவனத்தின் குடோன்களில் 30 டிப்பர் லாரிகளில் இருந்தும் நாணயங்கள் கொட்டப்பட்டுள்ளன. 100 கோடி டாலருக்கும் சில்லரை. இதை எப்படி எண்ணுவது, எங்கே பாதுகாப்பாக வைப்பது எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள். வங்கிகளில் இவ்வளவு சில்லரைகளை ஏற்க மாட்டார்கள். ஒரே நேரத்தில் இவற்றை நோட்டாக மாற்றுவதும் கடினம் என்பதால் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என முடிவான போது, அதை எப்படி கொடுப்பது என்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதனால் சில்லரைகளை அனுப்பி பழி வாங்கியுள்ளது சாம்சங்.எங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. எல்லா ஸ்மார்ட் போனும் செவ்வக வடிவத்தில்தான் இருக்கும். செவ்வக வடிவத்துக்கு எல்லாம் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டு, யாரும் அந்த சைசில் போன் தயாரிக்கக் கூடாது என்கிறார்கள். எங்களிடமே காப்புரிமை விளையாட்டு விளையாடுகிறார்கள். எங்களுக்கும் விளையாடத் தெரியும். எப்புடி... என பேட்டி கொடுத்திருக்கிறார் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் லீ குன் ஹீ.

ஆப்பிளை பழிவாங்கியது சாம்சங் 100 கோடி டாலர் நஷ்டஈடை சில்லரையாக கொடுத்தது Reviewed by Author on February 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.