கடந்த வருடம் 1209 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்!
16 வயதுக்கும் குறைவான வயதுள்ள ஆயிரத்து 209 பெண் பிள்ளைகள் கடந்த வருடம் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் பெரும்பாலானவர்கள் விரும்பிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் 292 பெண் பிள்ளைகள் பலவந்தமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பாலியல் தொடர்பான போதிய அறிவு இல்லாததே இதற்கு காரணம் எனவும் இணையத்தளங்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களும் இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளன எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் 1209 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்!
Reviewed by Author
on
February 15, 2016
Rating:
Reviewed by Author
on
February 15, 2016
Rating:


No comments:
Post a Comment