அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் அனுசரணையுடன் இலண்டன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தின் ஆதரவில் மன்னார் மாவட்டத்திலுள்ள ஆதரவற்ற பாடசாலை மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு

மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் அனுசரணையுடன் இலண்டன் தமிழ் கத்தோலிக்க  ஒன்றியத்தின் ஆதரவில் மன்னார் மாவட்டத்திலுள்ள ஆதரவற்ற பாடசாலை மாணவர்களின்  ஒன்றுகூடல் நிகழ்வு.

இந்நிகழ்வு கடந்த 14-02-2016 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு  இலண்டன் தமிழ் கத்தோலிக்க  ஒன்றியத்தின் தலைவர் திரு.கசியன் பிலிப்புப்பிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராக வருகைதந்து இந்நிகழ்வை சிறப்பித்தார். மற்றும் மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் அவர்களும் சிறப்பு விருந்தினராக வருகைதந்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்விற்கு ம.து.ம.ச. செயலாளர் திரு.தோமஸ் மரியதாஸ் அவர்கள் தலைமைதாங்கி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் 80 மாணவர்களுடன் அவர்களினது பாதுகாவலர்களும் வருகைதந்திருந்தனர்.

இம்மாணவர்களுக்கு அவர்களது 1ம் தவணை கல்வி ஊக்குவிப்பு உதவித்தொகையுடன் புத்தகப்பையும் வழங்கி மதியஉணவுடன் இவ் ஒன்றுகூடல் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.












மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் அனுசரணையுடன் இலண்டன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தின் ஆதரவில் மன்னார் மாவட்டத்திலுள்ள ஆதரவற்ற பாடசாலை மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு Reviewed by NEWMANNAR on February 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.