கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 32 சிங்கள குடும்பங்கள் மீள்குடியேற்றம்
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு பின்னர் 32 குடும்பங்களைச் சேர்ந்த 91சிங்கள மக்களும் மீள்குடியேறியுள்ளனர் என பிரதேச செயலக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரைச்சி பிரதேச செயலகத்தில் மொத்தமாக 23278 குடும்பங்களைச் சேர்ந்த 75910 மக்களில் 23079 தமிழ் குடும்பங்களச் சேர்ந்த 75203 மக்களும், 167 முஸ்லிம்
குடும்பங்களைச் சேர்நத 616 மக்களும், அடங்குகின்றனர்.
மேற்படி சிங்கள மக்கள் கரைச்சி பிரதேச செயலகத்தின் கீழ்குறிப்பிடப்படும் கிராமங்களில் தங்களின் மீள்குடியேற்ற பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆனைவிழுந்தான் 3 குடும்பங்கள், கண்ணகிநகர் ஒரு குடும்பம், கோணாவில் ஒரு குடும்பம், மலையாளபுரம் ஒரு குடும்பம், கிருஸ்ணபுரம் இரண்டு குடும்பங்கள், செல்வாநகர் ஒரு குடும்பம், ஆனந்தபுரம் 3 குடும்பங்கள், திருவையாறு ஒரு குடும்பம்,
இரத்தினபுரம் ஒரு குடும்பம், கனகாம்பிகைகுளம் ஒரு குடும்பம், கிளிநகர் 10 குடும்பம், திருநகர் இரண்டு குடும்பங்கள், பெரியபரந்தன் ஒரு குடும்பம், ஊற்றுப்புலம் ஒரு குடும்பம், ஜெயந்திநகர் ஒரு குடும்பம் என பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 32 சிங்கள குடும்பங்கள் மீள்குடியேற்றம்
Reviewed by NEWMANNAR
on
February 15, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 15, 2016
Rating:


No comments:
Post a Comment