யாழ்ப்பாணம்.கீரிமலையில் இருந்து வெளியேறும் இராணுவம்....
யாழ்ப்பாணம், கீரிமலை பிரதேசத்தில் பல ஆண்டுகளாக நிலைக்கொண்டிருந்த இராணுவத்தினர் (26) அங்கிருந்து வெளியேறவுள்ளதாக இராணுவத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீரிமலையில் இருந்து வெளியேறும் இராணுவத்தினர், கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாணத்தில் நிர்மாணித்த மாளிகைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாளிகையை நிர்மாணிக்க 200 கோடி ரூபா செலவிடப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி மாளிகையை ஒரு ஹோட்டலாக மாற்றப் போவதாக வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு முறை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்.கீரிமலையில் இருந்து வெளியேறும் இராணுவம்....
Reviewed by Author
on
February 26, 2016
Rating:
Reviewed by Author
on
February 26, 2016
Rating:


No comments:
Post a Comment