அண்மைய செய்திகள்

recent
-

தமிழர்களின் மனதை வெல்லதவறியது அரசாங்கம்! ரெஜினோல்ட் குரே...



நாட்டியுல் யுத்தத்தினை முடியுக்கு கொண்டு வந்துள்ள போதுதிலும் அரசாங்கத்தினால் தமழ் மக்களின் மனதை வெல்ல முடியவில்லை என வட மாணாக புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
புதிய ஆளுநராக பதிவியேற்றதன் பின்னர், சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் மனதை வென்று அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வட மாகாணத்தில் கடந்த காலங்களில் பல் வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவை அனைத்தும் தென்பகுதியிலுள்ள ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வர்த்தகர்களைக் கொண்டே முன்னெடுக்கப்பட்டு வந்ததுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த அபிவிருத்தி திட்டங்கள் வட பகுதி மக்களுடன் இணைந்தே மேற்கொண்டிருக்க வேண்டும் என  அவர் வலியுறுத்தியுள்ளார்.

படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் கையளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அதனை துரிததப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழர் பிரதேசங்களில் பெரும்பான்மை இனத்தவர் ஒருவருக்கு உயர் பதவி வழங்குவது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அவ்வாறு பதவி வழங்குவதில் தவறு ஏதும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

பெருபான்மை இன மக்கள் செரிந்து வாழும் மேல்மாகாணத்தில் தமிழர் ஒருவர் ஆளுநாராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் இதன் போது கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டின் தென் பகுதியில் முக்கிய பதவிகள் பலவற்றை தமிழர்கள் வகித்து வருகின்றனர் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சரான ரெஜினோல்ட் குரே, வடமாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின முன்னிலையில் பதவி பிரமானம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசாங்கத்தின் நிதி முழுமையாக செலவிடப்படும்: வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே

தமிழர்களின் மனதை வெல்லதவறியது அரசாங்கம்! ரெஜினோல்ட் குரே... Reviewed by Author on February 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.