கச்சத்தீவு திருவிழாவிற்கு இராமேஸ்வர மக்களுக்கு மாத்திரமே அனுமதி
கச்சத்தீவு திருவிழாவிற்கு இராமேஸ்வரத்தில் இருந்து மாத்திரமே இந்திய பிரஜைகள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தை தவிர்ந்து ஏனைய பகுதிகளிலிருந்து கச்சதீவு திருவிழாவிற்கு செல்வோர் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராமேஸ்வரம் பொலிஸ் துணை கண்காணிப்பாளர் முத்துராமலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவு திருவிழாவிற்கு இராமேஸ்வரத்தில் செல்வதற்கென 91 படகுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் , மூவாயிரத்து 500 பக்தர்கள் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் இடம்பெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது பொலிஸ் துணை கண்காணிப்பாளர் இந்த விடயங்கள் குறித்து தௌிவுப்படுத்தியுள்ளதாக எமது
குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கச்சத்தீவு திருவிழாவிற்கு இராமேஸ்வர மக்களுக்கு மாத்திரமே அனுமதி
Reviewed by NEWMANNAR
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment