21 பேருடன் சென்ற விமானம் நேபாள மலைப்பகுதியில் மாயம்
போகாராவில் இருந்து 18 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் ஜோம்சோம் சென்ற விமானம் மேற்கு நேபாளத்தின் மலைப்பகுதியில் மாயமாகியது.
விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 18 நிமிடங்களில் விமானநிலைய கட்டுப்பாட்டை இழந்து மாயமாகியுள்ளது.
விமானத்தை கண்டுபிடிக்கும் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருவதோடு இரண்டு ஹெலிகொப்டர்கள் தேடும் பணியில் களமிறக்கப்பட்டுள்ளன. மோசமான வானிலையின் காரணமாக பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் விமானமானது கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று போகாரா விமானநிலைய அதிகாரி யோகேந்திர குமார் கூறியுள்ளார்.
விமானம் செல்லும் இரண்டு விமான நிலையங்கள் இடையே எந்தவொரு விமான இறங்குதளமும் கிடையாது என்பதால் விமானம் விபத்துக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
21 பேருடன் சென்ற விமானம் நேபாள மலைப்பகுதியில் மாயம்
Reviewed by NEWMANNAR
on
February 25, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 25, 2016
Rating:


No comments:
Post a Comment