மன்னார் பள்ளிமுனை மீனவர்களை தாக்கிய கடற்படையினரை சட்டத்தின்முன் நிறுத்துமாறு கடிதம்....
மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் இரணதீவு கடற்பரப்பில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்திய கடற்படையினரை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கப்டவேண்டும். இவ்வாறன அச்சுறுத்தும் செயற்பாடுகள் மீண்டும் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கையிணையினை எடுக்ககோரி ஊடகவியலாளர் சநிதிப்பொன்று நடைபெற்றது.
மன்னாரில் மீனவ அமைப்புக்களுடன் பொது அமைப்புகள் இணைந்து இன்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பு மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச கட்டடத்தில் நடைபெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் தேசிய மீனவ ஒத்தழைப்பு பேரவை இணைப்பாளர் அந்தோணி இயேசுதாஸ், அதன் மன்னார் இணைப்பாளர் அ.பெனடிக்ற் குரூஸ், மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சமாசத்தின் தலைவர் எம்.என்.ஆலம், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை, வங்காலை பங்கு தந்தை ஜெயபாலன், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு, நிறுவனத்தின் இணைப்பாளர் ஜே.யாட்சன் பிகிறாடோ மற்றும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசம், கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும், வடமாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் குறித்த விடயம் தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,
“அன்று கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக,
14.02.2016 அன்று கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்த மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நால்வர் மீது கடற்படையினர் கூறிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒருவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் யாழ் மாவட்ட வைத்தியசாலையிலும், மற்றும் ஒருவர் மன்னார் மாவட்ட வைத்தியசாலையிலும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்டுள்ளமீனவர்கள் தொடர்பில் கடற்படைவீரர்கள் நடந்துகொண்டுள்ள முறை பாரதூரமானது. மிகவும் கண்டிக்கத்தக்கது. மீனவர்கள் சட்டத்திற்கு முரனான தொழில் அல்லது தவறான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தால் அம் மீனவர்களை நீதிமன்றம் ஊடாக முன்நிறுத்தி அவருக்கான தண்டனையை பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.
சட்டத்தைகாப்பதற்காக பொறுப்பானவர்கள் சட்டத்தை கையில் எடுத்து செயற்படுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இந்தச் சம்பவத்தில் காயங்களுக்குள்ளான ஒருவரின் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது.
இவ்வாறான ஒருசில கடற்படையினரின் செயற்பாடுகளால் முழுக்கடற்படையினரையும் நாம் குற்றம் சாட்டவோ, அல்லது குறை கூறவோ முடியாது. எனவே எதிர்காலத்தில் இவ்வாறு மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுவதுடன் அதற்கான உத்தரவாதமும் அளிக்கப்பட்ட வேண்டும்.
சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளில் ஈடுபடும் மீனவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் இச் சம்வபத்தில் தொடர்புபட்ட கடற்படையினருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். என மன்னார் மாவட்ட மீனவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்”
என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பள்ளிமுனை மீனவர்களை தாக்கிய கடற்படையினரை சட்டத்தின்முன் நிறுத்துமாறு கடிதம்....
Reviewed by Author
on
February 16, 2016
Rating:

No comments:
Post a Comment