இருப்பவர்கள் இருந்தால் இப்படி நடக்குமா? வவுனியாவில் கொதித்தெழுந்த மாணவர்கள்...
வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு வவுனியா பாடசாலை மாணவர்கள் இன்று 10 மணியில் இருந்து 11 மணிவரை ஒரு மணிநேரம் தமது பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பவர்கள் இருந்தால் இப்படி நடக்குமா எனத் தெரிவித்து இவர்கள் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மரணமடைந்த மாணவிக்கு நீதிவேண்டியும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இம் மாணவர்கள் தமது பாடசாலை வாயில்களுக்கு முன்னால் ஒரு மணிநேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.
இருப்பவர்கள் இருந்தால் இப்படி நடக்குமா? வவுனியாவில் கொதித்தெழுந்த மாணவர்கள்...
Reviewed by Author
on
February 24, 2016
Rating:

No comments:
Post a Comment