அண்மைய செய்திகள்

recent
-

தன்னை தாக்கிய நபர் சுதந்திரமாக நடமாடுகின்றார்-மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் கவலை.படம் இணைப்பு


மன்னார் அடம்பன் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை இளைஞர் ஒருவர் கூரிய இரும்பு கம்பியினால் பலமாக தாக்கப்பட்டு தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் தன்னை தாக்கிய நபருக்கு எதிராக அடம்பன் பொலிஸார் இது வரை சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அடம்பன்  சகாய வீதியைச் சேர்ந்த எம்.பிரேம் குமார்(வயது-35) என்ற இளைஞர் விசனம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

அடம்பம் சகாய வீதியைச் சேர்ந்த எம்.பிரேம் குமார் (வயது-35) என்ற இளைஞனை கடந்த வெள்ளிக்கிழமை காலை அடம்பன் பகுதியைச் சேர்ந்த பிறிதொரு நபர் ஒருவர் கூரிய இரும்புக்கம்பியினால் கடுமையாக தாக்கிய நிலையில் எம்.பிரேம் குமார் என்ற இளைஞன் கடுமையான காயங்களுக்கு உள்ளானார்.

இந்த நிலையில் குறித்த இளைஞன் உடனடியாக நண்பர்களின் உதவியுடன் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார்.

இதன் போது தலையில் காயம் ஏற்பட்டுள்ளதோடு கையில் முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் மன்னார் பொது வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

எனினும் தாக்கியதாக கூறப்படும் அப்பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை அடம்பன் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர் ஒருவரே தன்னை தாக்கியதாகவும்,குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் அழுத்தத்தின் காரணமாகவே தன்னை தாக்கிய நபரை பொலிஸார் விடுதலை செய்ததாகவும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் ஆதங்கம் தெரிவித்தார்.

இதே வேளை கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் கடந்த 3 தினங்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் இது வரை பார்வையிடவில்லை என தெரிய வருகின்றது.

சட்ட வைத்திய அதிகாரியின் சட்ட வைத்திய அறிக்கை பொலிஸாருக்கு வழங்கப்படவில்லை.

இதன் காரணமாகவே குறித்த நபர் கைது செய்யப்படவில்லை என தெரிய வருகின்றது.

மன்னார் வைத்தியசாலை தரப்பினர் குறித்த இளைஞன் அனுமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வராததன் காரணத்தினாலேயே சட்ட வைத்திய அதிகாரி அங்கு சென்று பார்வையிடவில்லை எனவும் தெரிய வருகின்றது.

இவ்விடையம் தொடர்பாக அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் ஆதரவாளர்கள் இருவருக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை மோதல் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காயமடைந்த அடம்பன் சகாய வீதியைச் சேர்ந்த எம்.பிரேம் குமார்(வயது-35) என்ற இளைஞன் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.தற்போது அவர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட இளைஞனின் மருத்துவ அறிக்கை கிடைத்ததன் பிரகாரம் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்.

நாங்கள் எந்த அரசியல் வாதிகளுக்கும் அடிபனியாது எமது கடமைகளை சரியான முறையில் மேற்கொள்ளுகின்றோம்.என அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.




தன்னை தாக்கிய நபர் சுதந்திரமாக நடமாடுகின்றார்-மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் கவலை.படம் இணைப்பு Reviewed by NEWMANNAR on February 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.