இலங்கைப் பயணம் குறித்து ஜெனிவா கூட்டத்தொடரில் விளக்கமளிப்பார் அல் ஹுசேன்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31வது கூட்டத்தொடரில், தனது இலங்கைப் பயணம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேன் விளக்கமளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஜெனிவாவில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 31வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.
இக்கூட்டத்தொடரில் தனது இலங்கைப் பயணம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசேன் விளக்கமளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பேரவையின் 31ஆவது கூட்டத் தொடரின் முதல் அமர்வில் நிகழ்த்தவுள்ள நீண்ட உரையில்,
செய்ட் ராட் அல் ஹுசேன், இலங்கை தொடர்பாக ஒரு பகுதியை ஒதுக்கி உள்ளதாகவும், அதன்போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து சுருக்கமான தகவவல்களை வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு வேறெந்த நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்படவில்லை.
எனினும், பொது விவாதங்களில், நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றும்போது அவ்வப்போது இலங்கை குறித்து கேள்விகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைப் பயணம் குறித்து ஜெனிவா கூட்டத்தொடரில் விளக்கமளிப்பார் அல் ஹுசேன்
Reviewed by Author
on
February 22, 2016
Rating:

No comments:
Post a Comment