அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சுகாதார அமைச்சு ஏனைய வைத்தியசாலைகளை கவனிப்பது போன்று மன்னார் வைத்தியசாலையை கவனிப்பதில்லை-ஜீ.குணசீலன்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.குறித்த பிரச்சினைகளை வடமாகாண சபை மட்டத்திற்கு கொண்டு சென்று தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

வடமாகாணத்தை பொருத்தவரையில்  காணப்படுகின்ற சுகாதார பிரச்சினைகளை ஒப்பிடும் போது மன்னார் மாவட்டத்தில் மிக கூடுதலான சுகாதார பிரச்சினைகளும் முறைப்பாடுகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றது.

வடமாகாணத்தில் இருக்கின்ற ஐந்து மாவட்டங்களில் அமைந்துள்ள பொது வைத்தியசாலைகளின் தரம் அதன் வசதி வாய்ப்புக்களை பார்க்கின்ற போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நிலை மிகவும் கவலைக்கூறியதாகவும், கேவலமாகவும் காணப்படுகின்றது.

-இதற்கான சரியான காரணத்தை புறிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.ஒரு வகையில் பார்க்கும் போது மன்னார் பொது வைத்தியசாலை என்பது ஒரு கஸ்ட பிரதேசத்திற்குள் அடைபடவில்லை.

எப்போதுமே அரசாங்க கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளது.குறிப்பாக பேர்க்காலங்களில் கூட மன்னார் வைத்தியசாலைக்கு தேவையான மருந்து வகைகள் ஓரலவுக்கு கிடைக்கக்கூடியதாக இருந்தது ஏனைய கஸ்ட பிரதேசங்களில் இருந்த வைத்தியசாலைகளுடன் ஒப்பிடும் போது.

ஆனால் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் வசதிகளை பார்க்கின்ற போது மருத்துவ உபகரண வசதிகளை பொருத்தவரையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.

-வடமாகாண சபையின் சுகாதார அமைச்சு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பக்கம் தமது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகொள்.

என்னைப்பொருத்தவரையில் வடமாகாண சுகாதார அமைச்சினால் கவனிக்கப்படுகின்ற அளவு ஏனைய மாவட்ட வைத்தியசாலைகளுடன் ஒப்பிடுகின்ற போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கனிக்கப்படுகின்றதாகவே நான் உணர்கின்றேன்.

எனவே இனி வரும் காலங்களில் இக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கு சகலரும் முன் வர வேண்டும்.அதற்கான முயற்சிகளை நாங்களும் செய்வோம் என வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.



(மன்னார் நிருபர்)

(22-2-2016)

வடமாகாண சுகாதார அமைச்சு ஏனைய வைத்தியசாலைகளை கவனிப்பது போன்று மன்னார் வைத்தியசாலையை கவனிப்பதில்லை-ஜீ.குணசீலன். Reviewed by NEWMANNAR on February 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.