அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஸ்ரீ சிவசுப்பிரமணியஆலய (முருகன் ஆலயம்) மணிக்கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா- 27-03-20--முழுமையான படங்களுடன்….16


மன்னார் மாவட்டத்தில் பேசாலைக்கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமணியஆலய (பேசாலை முருகன் ஆலயம்) மணிக்கூட்டுக்கோபுரத்திற்கான அடிக்கல்நாட்டும் விழா இன்று 27-03-2016 காலை 10-30 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

இவ்விழாவிற்கு ஆலயக்குருக்கள் மஹா.தர்மகுமார சர்மா அவர்களுடன் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் வைத்திய கலாநிதி கதிர்காமநாதன்
மன்னார் மாவட்ட இந்து மஹா சபையின் தலைவர் இராமக்கிருஷ்ணன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநோநோதரலிங்கம்
சித்த மருத்துவர் மகேந்திரன்
மன்னார்மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் பு.மணிசேகரம்
கணேசலிங்கம் சொக்கலிங்கம் இவர்களுடன் வர்த்தகப்பெருமக்கள் ஆலயப்பரிபால சபையினர் பக்தகோடிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பேசாலை முருகன் ஆலயத்திற்கு இன்னும் தேவைப்பாடுகள் உள்ளதாகவும் தற்போது அடிக்கல் நாட்டிய மணிக்கோபுரத்தினை தனியே முத்தையா மலராசா தேவர் அவர் குடும்பத்தார் போல சிறிய வைரவர் ஆலயம் கட்டவேண்டும் எனவும் அதே போல் நவக்கிரகங்களுக்கான சிறிய மண்டபம் அமைக்கவேண்டும் எனவும் ஆலயக்குருக்கள் வேண்டுகோளை முன்வைத்தபோது.
வைரவவர் ஆலயத்தினை தனது செலவில் கட்டித்தருவதாக வைரவச்செல்வன் விருது பெற்ற வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் அவர்கள் ஏற்றுக்கொண்டார். அது போல நவக்கிரக மண்டபம் அமைப்பதற்கன நிதிப்பங்கீட்டிற்காக......
ஆலயக்குருக்கள்  மஹா.தர்மகுமார சர்மா அவர்கள் 50000 ரூபா
பேசாலை தீபன் அவர்கள்                    50000 ரூபா
எழுத்தூர் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் முன்னாள் தலைவர் ஆழகரெட்ணம் 25000ரூபா
மன்னார் சித்த மருத்துவர் மகேந்திரன் அவர்கள்    25000ரூபா
கணேசலிங்கம் சொக்கலிங்கம் அவர்கள் 25 சீமெந்து பைக்கற்றுகள்
இவ்வாறு பலரும் தம்மால் முடிந்த உதவிகளை வழங்குவதாக வாக்களித்தனர் அதனைத்தொடர்ந்து ஆலயக்குருக்களின் நன்றி பாராட்டுதலோடு அடியார்களுக்கு அன்னதான நிகழ்வும் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
நிதி அன்பளிப்புகளை வழங்க விரும்புகின்றவர்கள் ஆலயப்பரிபால சபையினர் தொடர்பு கொள்ளலாம்…






































மன்னார் ஸ்ரீ சிவசுப்பிரமணியஆலய (முருகன் ஆலயம்) மணிக்கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா- 27-03-20--முழுமையான படங்களுடன்….16 Reviewed by Author on March 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.