தொடரும் ஆதிக்கம்.. சவாலுக்கு தயார்: டோனி உற்சாகம்
உலகின் எந்த இடத்திலும், எந்தவொரு அணியையும் சந்திக்க தயாராக இருப்பதாக இந்திய அணித்தலைவர் டோனி உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரையும் 2-1 என வென்றது.
இந்நிலையில் ஆசியக்கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இது பற்றி இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், தவறான விடயங்களை 15 நிமிடத்தில் கற்றுக் கொள்ளலாம். ஆனால் சிறந்த விடயங்களை கற்க நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும்.
எங்களது அணியில் துடுப்பாட்ட வரிசையில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் பந்துவீச்சில் மாற்றங்கள் செய்யப்படலாம்.
மேலும், வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினமானது.
ஆனால் நாங்கள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். கண்டிப்பாக வங்கதேசத்திற்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடரும் ஆதிக்கம்.. சவாலுக்கு தயார்: டோனி உற்சாகம்
Reviewed by Author
on
March 05, 2016
Rating:
Reviewed by Author
on
March 05, 2016
Rating:


No comments:
Post a Comment