வன்னி மாவட்ட விவசாயிகள் வெட்டுக்கிளியின் தாக்கத்தினால் பாதிப்பு-நஸ்ட ஈட்டை வழங்க செல்வம் எம்.பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை.
வன்னி மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்பயிர்ச் செய்கையில் வெட்டுக்கிளியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும்,இதனால் விவசாயிகள் பாரிய நஸ்டத்தை எதிர் நேக்கியுள்ள நிலையில் பாதீக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஸ்ட ஈட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்,ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் இம்முறை பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பெறும்போக நெற்செய்கையினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விவசாயிகள் அறுவடைக்காக காத்திருக்கும் நேரத்தில் தற்போது நெற்பயிர்ச் செய்கையில் வெட்டுக்கிளியில் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் விவசாயிகள் பாரிய நஸ்டத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.விவசயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக மேற்கொண்டுள்ள காப்புறுதியினை வழங்க காப்பறுதி நிறுவனங்கள் மறுத்து வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட வறிய விவசாயிகளுக்கு உடனடியாக நஸ்ட ஈட்டை வழங்க வேண்டும் என்பதோடு,எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் இவ்வாறான பாதீப்புக்களில் இருந்து தமது விவசாய நடவடிக்கைகளை பாதுகாக்க அரசு விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்,ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட விவசாயிகள் வெட்டுக்கிளியின் தாக்கத்தினால் பாதிப்பு-நஸ்ட ஈட்டை வழங்க செல்வம் எம்.பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை.
Reviewed by NEWMANNAR
on
March 04, 2016
Rating:
No comments:
Post a Comment