டோனியை விட அதிகம் சம்பாதிக்கும் கோஹ்லி!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி விளம்பரங்கள் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக திகழ்கிறார்.
ஆனால் துடுப்பாட்ட மட்டையில் இடம்பெறும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பதில் டோனியை முந்தியுள்ளார் விராட் கோஹ்லி.
துடுப்பாட்ட மட்டையில் இடம்பெறும் விளம்பரங்கள் மூலம் டோனி ஆண்டு ரூ.6 கோடி சம்பாதிக்கிறார். ஆனால் கோஹ்லி ஆண்டுக்கு ரூ. 8 கோடி சம்பாதிக்கிறார்.
அதாவது துடுப்பாட்ட மட்டையில் பொறிக்கப்பட்டு இருக்கும் விளம்பரங்கள் மூலம் டோனியை விட கோஹ்லி கூடுதலாக ரூ.2 கோடி சம்பாதிக்கிறார்.
அதேபோல் யுவராஜ் ரூ.4 கோடியும், ரோஹித் சர்மா, தவான் தலா ரூ.3 கோடியும், ரெய்னா ரூ.2.5- 3 கோடியும் சம்பாதிக்கின்றனர்.
டோனியை விட அதிகம் சம்பாதிக்கும் கோஹ்லி!
Reviewed by Author
on
March 21, 2016
Rating:
Reviewed by Author
on
March 21, 2016
Rating:


No comments:
Post a Comment